சிறப்பாக நடைபெற்றுமுடிந்த கலாசாரப் பெருவிழா - 2014

வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில்
வேலணை பிரதேச கலாசாரப் பேரவையும்,வேலணைப் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலாசாரப் பெருவிழா - 2014  இன்று (04.12.201) வேலணை பிரதேச செயலக விழா மண்டபத்தில் வேலணை பிரதேச செயலரும், கலாசாரப் பேரவைத் தலைவருமான திருமதி மஞ்சுளாதேவி சதீஷன் தலைமையில் நடைபெற்றது.
.

பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சுந்தரம் அருமைநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்.மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களும், வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி உஷா சுபலிங்கம் அவர்களும் கலந்துகொண்டனர்.

இதில் விசேட நிகழ்வாக பிரதேச சபை கலாசார பேரவையினால் தென்தீபம் நூல் வெளியீடு இடம்பெற்றது.
தொடர்ந்து வேலணை துறையூர் ஐயனார் கலாமன்றம் உட்பட ஏனைய மன்றங்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இறுதியாக அரிச்சந்திர மயான காண்டமும்  நடைபெற்றது.

படங்களுக்கு இணைப்பை கிளிக் செய்யவும் ..
http://www.velanaiuoor.com/2014/12/velanai.html

Recent Posts