வேலணைப் பிரதேசத்தில் வீதிகளை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை!

வேலணைப் பிர­தேச சபைக்­குட்­பட்ட சிற்­றம்­பனை வீதி, சாட்டி வீதி, சாமிக்­கட்டு வீதி என்­பன மிக நீண்ட கால­மாக
புன­ர­மைக்­கப்­ப­டா­மை­யால் சேத­ம­டைந்த நிலையில் காணப்­ப­டு­கின்­றன.

இதனால் இவ்­வீ­தி­களில் போக்­கு­வ­ரத்துச் செய்ய முடி­யாத நிலை காணப்­ப­டு­வ­தா­கவும் இப்­ப­குதி மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

சாட்டி வீதியை தினமும் சாட்டிக் கடற்­க­ரைக்குச் செல்­வோரும், தேவா­லயம் மற்றும் பள்­ளி­வா­ச­லுக்குச் செல்­வோரும் பயன்­ப­டுத்தி வரு­வதால் இவ்­வீதி முக்­கிய வீதி­யாகக் காணப்­ப­டு­கின்­றது எனத் தெரி­விக்­கும் இப்­ப­குதி மக்கள், உட­ன­டி­யாக புன­ர­மைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

இதேபோல் சிற்­றம்­பனை வீதியும் இப்­ பி­ர­தே­சத்­துக்கான போக்­கு­வ­ரத்தால் முக்­கிய வீதி­யாகக் காணப்­ப­டு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை மண்­கும்பான், சாமிக்­கட்டு வீதியில் கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் புன­ர­மைப்­புக்­கென இரு மத­குகள் உடைக்­கப்­பட்டு வீதிப் புன­ர­மைப்புப் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள போதிலும் இவ்­வீ­தியும் இன்­னமும் புன­ர­மைக்­கப்­ப­ட­வில்லை.

எனவே மழைக் காலம் ஆரம்­பித்­துள்ள நிலையில் மக்­களின் போக்­கு­வ­ரத்­தைக் கருத்திற்கொண்டு இந்த மூன்று வீதிகளையும் உடனடியாக புனரமைக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

Recent Posts